Wednesday 6 January 2016






உயர்நிலை 4 (உயர்தமிழ்)
கட்டுரை

வலைப்பூக்கள் உருவாக்குவதால் இளைஞர்கள் நன்மை பெறுவார்கள் என்று நீ எண்ணுகிறாயா?

Blogging – ப்ளாக்கிங்

1.      நீங்கள் 20 வயதிற்குக் கீழுள்ள இளைஞரா ? அப்படி என்றால் இந்த ப்ளாக்கிங் என்ற சொல் உங்களுக்கு தண்ணீர் பட்டப்பாடுதான். ஆனால் 40 வயதிற்கு மேல் உள்ளவர் என்றால், நீங்கள் இந்த சொல்லைப் பற்றி கேள்விப்பட்டோ அல்லது படாமலோ இருப்பீர்கள்.

2.      இதற்குக் காரணம் என்ன? நமது வேலை பளுவோ அல்லது குடும்பத்தின் மீதுள்ள  அக்கறையோ அல்லது வாழ்வின் முன்னேற்றமோ முக்கிய காரணமாகிறது. அதனால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் இந்த பெயர் மட்டுமல்ல இதைப் பற்றி சிந்திக்கவே மாட்டோம்.

3.      அப்படி என்றால் நேரம் இந்த இணைய பக்கத்தில் நம்மை முழுவதும் சாப்பிட்டுவிடும் என்றுதான் கூற வேண்டும்.

4.      எப்படி  மின்னஞ்சல் 10 ஆண்டுகளுக்கு முன்  அறிமுகம் ஆகி, பின்னர் இன்று நம்மை ஆட்டி படைக்கிறதோ அதைப் போல்தான் இந்த bloggin கும் இன்று ஆட்டி படைக்கிறது இளைஞர்களை.

5.      Blogging என்றால் என்ன? இந்த வினாவிற்கு விடை இப்படி அமையலாம்.

6.      Web – Log அதாவது இணைய நாட்குறிப்பு என்று கூறலாம். மிகவும்  சுருக்கமாக மற்றவர்களும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இணையத்தில் உலாவவிடப்படும் ஒன்றுதான் இந்த blogging .

7.      இந்த டைரியில் விரைவாகவும், நினைத்தவுடனும் , நம் எண்ணங்களை வெளியிட்டு மற்றவர்களைக் கவர இயலுவதால்தான், பதின்மவயதினர் இன்று இதை பெரிதும் போற்றி பாராட்டுகின்றனர்.

8.      Positive : ( இந்த இணை பக்கத்தால் ஏற்படும் நன்மைகள். )

9.      இது ஒரு தனி நபரின் இணைய பக்கம். அதில் ஒருவர் எதை வேண்டுமானாலும் எழுதிக் கொண்டு உள்ளம் மகிழ்ச்சியடையலாம். தனது கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திக் கொள்ளலாம். இதனால் அவருக்கு மன உற்சாகம் உண்டாகும். மன உளைச்சல் குறையும்.

10.  குறிப்பிட்ட ஒரு துறையில் இருக்கும் ஆர்வத்தால் ஒருவர் இந்த blogging வேலையில் ஈடுபடுவார். அதனால் அவருடைய ஆற்றல் வெளிப்பட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார். இதனால் அவருடைய ஆற்றல் வளரும். 

11.  பெரும்பாலும்  இதில் எழுதுபவர்கள் மொழி வல்லமையையும் பெற்று விளங்க முடியும். பெரும்பாலும் ஆங்கில மொழியில் எழுதி படிப்பதால் அந்த மொழியில் எழுதி படிப்பதால் மொழி வல்லமை பெறலாம்.

12.  தொலைக்காட்சி, வானொலி போல் இது ஒரு செய்தி பரப்பும்  தகவல் சாதனம். அதனால் விரைவாக செய்திகள் பரவும். - நல்ல செய்திகளும் கெட்ட செய்திகளும்தான்.

13.  இதை யாரும்  தணிக்கை செய்யாததால், எழுதுபவரின் உண்மையான மன நிலை வெளிப்படும். மற்ற தகவல் சாதங்களில் இல்லாத செய்திகளும் இதில் உண்டு. ஆனால் இந்தச் செய்தி உண்மையா பொய்யா என்ற தெரியாது. படிப்பவரின் எண்ணத்தையும் உணர்ச்சியையும் பொறுத்து செய்தி பயணம் செய்யும்.

14.  சிந்திக்கும் ஆற்றல் பெருகும். ஒரு குறிப்பிட்ட செய்தி பற்றியோ மனிதர் பற்றியோ எழுதும் போது படைப்பாற்றல் பெருகும். அதனால் எழுதுபவரின் கற்பனை ஆற்றல் வளர்கிறது.

15.  படிப்பவருக்கும் எழுதுபவருக்கும் இடையில் ஒரு ஒற்றுமை உணர்வும் இணைந்த கருத்து ஒற்றுமைப்ம் ஏற்படும்.

16.  இணையத்தில் யாரும் எவரும் தம் கருத்தை வெளியிட்டுக் கொள்ள முடியும் இந்த ஒரு இடம்தான் சமரசம் உலாவும் இடம்.

17.  Negative – ( இந்த இணைய பக்கத்தால் ஏற்படும் தீமைகள்)

18.  Blog –குகளில் எதை வேண்டுமானாலும் எழுதலாம். என்னும் போது அதில், நல்ல கருத்தும் உண்டு தீய கருத்தும் உலா வரலாம். தீமை பயக்கும் செய்திகளைப் பரப்பி மக்களுக்குப் பயத்தையும் ஊட்ட முடியும்.

19.  இந்த பக்கத்தில் எழுதுபவர்கள், மற்றவர்களின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பற்றி தெரிந்து கொள்ளாமலும் எழுதினால் அதனால் பல தீய விளைவுகள் ஏற்படும். எடுத்துக்காட்டாக, மதம் பிரச்சனைகளைப் பற்றி எழுதுவதால்தான் மதகலவரங்களும் சண்டைகளும் உண்டாகின்றன.

20.  அரசாங்கத்திற்கு எதிராக எழுதினாலும் வம்புதான் வரும். அப்படி மாட்டிக் கொண்டவர்தான், Mr. Brown

21.  அதுமட்டுமல்ல blog களில் எழுதியிருப்பது எவ்வளவு உண்மை என்பதும் aதெரியாது. பல பெண்கள் ஏமாற்றம் அடைந்து தங்கள் கற்பையும் பறிகொடுத்துள்ளனர்.

22.  அன்றாடம் blogging செய்வதால் அதிக நேரம் செலவாகிறது. மற்ற பயனுள்ள நடவடிக்கைகளில் நேரம் செலவிட முடியாமல் அந்த வாய்பெல்லாம் இழந்துவிடப்படும்.

23.  தனிப்பட்ட பல தகவல்களை வெளியிட்டு விடுவதால் நம் தனித்தன்மைகள் குறைந்துவிடும். அங்கே எந்த ரகசியமும் இல்லாமல் போய்விடும்.


முடிவுரை

ஆகவே இன்று அறிவியலில் ஆற்றல் பல உருவங்களில் மனிதர்களின் சக்தியைப் பயன்படுத்தி, அவனை நல்லவனாகவும் கெட்டவனாகவும் ஆக்குகிறது. நம் மனத்தின் சக்தியால் மட்டுமே நாம் உயர முடியும். அந்த மனத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது நம் கையில்தான் உள்ளது.


நன்றி